தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்!

நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில், மண் சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையே வாகன போக்குவரத்து தடைபட்டுள்ள போதிலும், நெடுஞ்சாலை பேருந்துகள்  வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பிற்குள் நுழையும் பேருந்துகள் தெற்கு அதிவேகப் பாதையில் பின்னதுவ இடைப்பாதையில் இருந்து வெளியேற வேண்டும், பின்னர் இமதுவ பரிமாற்றம் வழியாக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைய வேண்டும்.

இதன்படி, காலி திசையிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகன சாரதிகள் இமதுவ சந்திப்பில் இருந்து வெளியேறுமாறும், கொழும்பு திசையில் இருந்து வரும் வாகன சாரதிகள் பின்னதுவ சந்திப்பிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply