வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

இலங்கையை சேர்ந்தவர்களுக்கு தாய்லாந்தில் தொழில் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இணையத்தில் விளம்பரம் பிரசுரித்து பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து பாதுகாப்பு சேவையில் தொழில் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து, அதற்கான நபர்களையும் தெரிவு செய்ததன் பின்னர் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதில்லை என்று பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir