இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 54 வயதுடைய நபரை கண்டி வியூ கார்டன் பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இந்த அங்கீகரிக்கப்படாத நிதி நடவடிக்கை மூலம் சுமார் 9.9 பில்லியன் ரூபா பாரியளவிலான பணத்தை மோசடி செய்துள்ளார்.
அவர் மேற்படி சட்டவிரோத நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் இப்போது துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.