ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் மரத்தென்ன பகுதியில் பாறைகள் மேடு ஒன்று வீதியில் வீழ்ந்ததையடுத்து வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின் விளைவாக இந்த பாறை சரிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து, ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் குறிப்பாக தெத்தனகல காப்புக்காடுக்கு அருகில் பயணிக்கும் போது, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரியுள்ளது.