நேற்றைய தினம் பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
வத்தேகம பகுதியைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்திலும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் உடலில் இரத்தம் வடிந்து காணப்பட்டமையால் தாக்குதல் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஸ்மல்ல பிரதேசத்திலும் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.