கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் 52 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (அ)
