இந்தியாவிலிருந்து இறக்குமதியான முட்டைகள் பழுதடைந்தவையா?

இதுவரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் விற்பனையாகியுள்ள நிலையில், முட்டைகள் பழுதடைந்து போனதாகவோ, அவற்றை உட்கொண்டதில் உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவோ எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ ஒரு புகார் கூட கிடைக்கப் பெறவில்லை என சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சில சதோச விற்பனை நிலையங்களில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பழுதடைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோதே சதொச தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்திய முட்டைகளை நான்கு நாட்களுக்கு வெளியே வைக்கலாம் என இலங்கை ஜெனரல் டிரேடிங் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்த போதிலும், சதொச விற்பனை நிலையங்களில் குளிர்ச்சித் தன்மை கொண்ட போத்தலில் அவற்றை அடைத்து வைப்பதாகவும் அபேவர்தன தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் முட்டைகளில் பழுதடைந்துள்ள முட்டைகள் இருப்பின் கொள்வனவு செய்யப்பட்ட திகதி மற்றும் பற்றுச்சீட்டுடன் சம்பந்தப்பட்ட சதொச விற்பனைநிலையத்திற்கு முறைப்பாடு செய்யலாம் அல்லது 1998 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கலாம் எனவும் தலைவர் தெரிவித்தார்.

முட்டைகள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நிலையங்களில் இறக்கியதும், அவற்றை பொதியிடல் செய்ய சில மணி நேரங்கள் செல்வதாகவும், மாதந்தோறும் 9, 10, 11, 23, 24 மற்றும் 25 ஆகிய ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கப்படும் திகதிகளில் அதிகளவில் முட்டைகள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். (ரெந-24)

You May Also Like

About the Author: digital

Leave a Reply