விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டால் மேலும் 5 அமைச்சர்கள் ஒரே சமயத்தில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருடன் மேலும் ஒரு அமைச்சர் மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, ரொஷான் ரணசிங்க குறித்து நாடாளுமன்றில் கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரொஷான் ஊழல்வாதியோ, மோசடியாளரோ, திருட்டுபேர்வழியோ அல்ல எனவும் அவருக்காக குரல் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும், தமது கட்சியுடன் அவரை இணைத்துக்கொள்ள எவ்வேளையிலும் தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக தமது கதவுகள் திறந்தே உள்ளன எனவும் குறிப்பிட்டார். (ரெந-28)