வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரைத் தாக்கி விட்டு வீதியில் தள்ளி விட்டு முகமூடிக் கொள்ளைக் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு தனது வீடு நோக்கி அந்தப் பெண் நடந்து செல்கையில் அவரை மோட்டார் சைக்கிள் ஒன்றில் தங்கள் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு பின் தொடர்ந்த இருவர் பெண்ணின் கழுத்தில் கை வைத்துள்ளனர்.
அதன்போதே அந்தப் பெண் கழுத்தில் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை எனத் தெரிந்து கொண்டதும் பெண்ணைத் தாக்கி விட்டு வீதியில் தள்ளி விழுத்தி விட்டு முகமூடிக் கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். (அ)
