யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல்

தமிழரின் உரிமைக்காக உயிர் நீத்த மாவீரர் வார நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில் மாவீரர் வார முதலாம் நாள் நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நினைவுத் தூபியில் இன்று நண்பகல் 12 மணியளவில் மாணவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply