வெலிக்கடை படுகொலை 37ஆவது ஆண்டு நினைவு

படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53பேரின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர் விஜயகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு  இன்று (25) நடைபெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் யெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் உபதலைவர் கென்றி மகேந்திரன், துணை மாவட்ட அமைப்பாளர் நாகராயன், பிரதேசசபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன், கார்தி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின்போது வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, யெகன் உள்ளிட்ட 53 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir