இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டமொன்று இன்று ராஜகிரயவிலுள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் அது தொடர்பாக மேலும் வலுவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

அதேநேரம், அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தெரிவித்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் உள்ள தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய குறை நிறைகள், நிதிப்பற்றாக்குறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் தேர்தல் மேற்பார்வை அதிகாரிகள் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir