முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனவீர்ப்புப் போராட்டமொன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
வடமாகாணக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்குச் சென்று மீனவர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகக் கதைப்பதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தப் போராட்டத்தில் யாழ் மாவட்ட மீனவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்டேருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.
மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தாம் அறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய தரப்புகளுக்குத் தெரியப்படுத்துவதாகவும், இந்த மகஜர்களை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். (04)
