கொழும்பு – கண்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு – கண்டி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு இணைக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்து பேருந்தின் ஊழியர்கள் தனியார் பேருந்தின் நடத்துனரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறித்த பாதையில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் கொழும்பு பஸ்தியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply