யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்றையதினம் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த நபரும் ஒப்படைக்கப்படுள்ளார்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
