பாடசாலைக்கு அருகில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

கிண்ணியா அல் அக்ஸா பாடசாலைக்கு அருகில் வெடிபொருட்கள் வைத்திருந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 201 கிராம் 400 மில்லிகிராம் வெடிபொருட்களும், 4 டெட்டனேட்டர்கள் மற்றும் சேவைக் கம்பிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

42 வயதுடைய சந்தேக நபர் தற்போது கிண்ணியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir