ஹபராதுவ, தல்பே வடக்கு பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் வேடமிட்ட இனந்தெரியாத குழுவொன்று குறித்த நபரை அவரது வீட்டில் இருந்து காரில் கடத்திச் சென்று வீதியோரம் கைவிடுவதற்கு முன்னர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதான இவர் மாத்தறை நாவிமன பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.