இலங்கையில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் முட்டையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவிற்கும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 53 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டையின் விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.