சர்வதேச ரீதியில் பிரித்தானிய மருத்துவ சம்மேளன நிகழ்வு அரங்கில் இடம்பெற்ற போலேட் வில்சன் செயற்பாட்டாளர் பேட்டன் விருதை அம்பாறை – சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது சிறுமி மர்யம் ஜெஸீம் வென்றுளார்.
இதன் மூலமாக தனது தாய் நாட்டிற்கும், சாய்ந்தமருது கிராமத்திற்கும் மர்யம் ஜெஸீம் பெருமை சேர்த்துள்ளார்.
அதேவேளை பேட்டன் விருது ஆரம்பிக்கப்பட்டு 6 வருடகால வரலாற்றில் சிறுமியர் எவரும் இந்த விருதை பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் இலங்கை சிறுமி ஒருவர் அந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.