பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் அதே இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை.

ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir