12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தோடு பெண் கைது!

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அதன் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

துபாயில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்துள்ள குறித்த பெண்ணிடம் 5.5 கிலோ கிராம் நிறையுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இடுப்பு பட்டி மற்றும் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. 35 வயதான பெண் கண்டியில் வசிக்கும் நபரை திருமணம் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply