துறைமுக தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த தடை!

இன்று முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றை நடத்துவதற்கு அதன் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் ஜனவரி 9 ஆம் திகதிக்கு பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்க உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளதாக பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகன குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, இன்றைய தினம் திட்டமிடப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தை தொழிற்சங்கவாதிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply