கடும்மழை பெய்யக்கூடும்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply