சுவிட்சர்லாந்திற்கு விஜயம் ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு பயணித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க இன்று காலை பயணித்துள்ளார்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK 649 என்ற விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 3:00 மணியளவில் பயணித்துள்ளார்.

இந்த மாநாட்டில் எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்த உள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி உகாண்டாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply