நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான, யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மொத்தம் 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் போது 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்), 07 கிலோ 900 கிராம் கஞ்சா, 3,604 கஞ்சா செடிகள் மற்றும் 126 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 877 சந்தேக நபர்களில் நால்வரை தடுத்து வைப்பதற்கான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
மேலும் 14 கைதானவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.