மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் மாலை கைது செய்துள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையினால் மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கடற்படையினர் 18 மீனவர்களுடன் 2 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், மீன்பிடி இழுவை படகுகளும் மன்னார், தல்பாடு கடற்பரப்பில் கரைக்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
