நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.