பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம் – மைத்திரிபால, மஹிந்தவுக்கு நீதிமன்று உத்தரவு

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிரிசேன கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

குறித்த சம்பவத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply