மத்துகம, ஓவிட்டிகல பிரதேசத்தில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான கலனா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவொன்று குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.