ஹுலந்த ஓயா பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததையடுத்து எம்பிலிட்டிபிட்டிய – மித்தெனிய பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மரம் வெட்டும் பாரவூர்தி ஒன்று குறுக்கே பயணித்த போதே பாலம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.