நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுப் பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 1725 கிலோகிராம் கஞ்சா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 589 சந்தேக நபர்களில் 5 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 3 சந்தேக நபர்களும் குறித்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.