அநுரகுமார திசாநாயக்க குஜராத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார தலைமையிலான குழுவினர்! தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் இடமான குஜராத்திற்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த குழுவினர் நேற்று (07.02.2024) இந்த சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த குழு குஜராத் முதல்வர் புபேந்திர படேலை சந்தித்து மாநிலத்தில் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசியலே பின்னர் இந்தியாவின் உயர் பதவிக்கு அவரை உயர்த்தியது.
இந்தநிலையில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவான ‘ஒப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்’ (Observer Research Foundation) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அத்துடன் குழுவினர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை பார்வையிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தப் பயணத்தின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இதேவேளை தூதுக்குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் இந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
