அவலோகிதேஸ்வர என்ற மஹிந்த பிணையில் விடுதலை!

அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

1மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவலோகிதேஸ்வரரைப் போன்று பாவனை செய்து பௌத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மகிந்த கொடிதுவாக்குவுக்கு மனநல சிகிச்சை தேவை என கடந்த ஜனவரி 24 அன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரியவந்தது.

இதேவேளை, சந்தேகநபரை அன்றைய தினம் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply