குடும்பத்தகராறில் கணவனால் மனைவி கொலை!

கணவனால் மனைவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் மூதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த பெண் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் , அவரது மனைவியின் ஆடைகளை பயன்படுத்தியே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் கணவரான 33 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply