மூத்த இந்தியப் பின்னணிப் பாடகரும் திரைப்பட இசையமைப்பாளருமான ஹரிஹரனால் நேற்று இரவு யாழ்ப்பாணம் முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பலத்த ரசிகர்களுடன் ஆரவாரம் செய்ததையடுத்து யாழ்ப்பாணப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேவேளை, குறித்த இசை நிகழ்ச்சிக்கு வந்த பெருந்திரளான மக்கள் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி பலவந்தமாக மைதானத்திற்குள் நுழைய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலால் பலர் காயமடைந்துள்ளனர், இருப்பினும் பொலிஸார் நிலைமையை சமாளித்தனர்.
குறித்த நிகழ்ச்சியில் தமன்னா, ரம்பா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.