வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கார் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட குறித்த காரை உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரத்தில் இருந்து வாடகை அடிப்படையில் குறித்த கார் பெறப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.