வளர்ப்பு நாயை தீ வைத்து எரித்த சந்தேக நபர் கைது!

கம்பஹா, இம்புல்கொடவில்  வளர்ப்பு நாயொன்றுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான குறித்த சந்தேகநபர் அதே பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 10 ஆம் திகதி இரவு அயல் வீட்டுக்காரர் ஒருவரால் எரிக்கப்பட்ட வளர்ப்பு நாய், அதன் உரிமையாளர்களால் கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டபோது பலத்த தீக்காயங்களால் உயிரிழந்தது.

பல ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் உரிமையாளரான சந்தேக நபர், தனது அண்டை வீட்டு பெண் வளர்ப்பு நாய் தனது நாய்களுடன் இனச்சேர்க்கை செய்ததாகக் கூறப்பட்டதால் அவர் கோபமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து யக்கல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply