யாழ். அச்சுவேலியில் திருட்டு சம்பவம் – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபரை, பொலிஸார் ஒரு மணித்தியாலயத்திற்குள் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13.2.2024) இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply