பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு கடமைக்குச் சென்றிருந்த நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மகொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.