யாழ்ப்பாணத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்தவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5000 ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று(16.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(14) ஆலய சூழலில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் ஐஸ்கிறீமிற்குள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ்கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply