முட்டை விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்: நுகர்வோர் கடும் விசனம்!

சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்திற்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply