பிரதான பாதையில் புகையிரத சேவைகள் மேலும் தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை புகையிரதத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19.2.2024) காலை பயணித்த ‘உடரட மெனிகே’ என்ற புகையிரதம் ராகம நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இந்நிலையில், தடம் புரண்ட புகையிரதம் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும், தண்டவாளம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தண்டவாளம் சீரமைக்கப்படும் வரை புகையிரதம் தாமதமாகும் என புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
