சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேடகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நாளை பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது.


சுகாதார தொழிற்சங்க கூட்டணி மற்றும் சுகாதார அமைச்சருக்கு இடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில், கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகளை தீர்க்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட அமைச்சு,சுகாதார தொழிற்சங்க கூட்டணி, அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை அமைச்சிடம் முன்வைக்குமாறு அமைச்சர் பணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply