சகோதரர்கள் மீது வாள்வெட்டு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் வீடொன்றிற்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply