தேசிய அடையாள அட்டைக்கு TIN இலக்கம்: நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கTIN இலக்கத்தை பிரதான இலக்கமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரிப் பதிவில் TIN இலக்கம் வழங்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே பிரதான இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும் இரண்டு நிறுவனங்களின் பரிந்துரைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply