மீன் பிடிக்க சென்றவர் கடலில் விழுந்து மாயம்!

 மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 பலப்பிட்டிய, ஹம்பே பிரதேசத்தை சேர்ந்த ரசிக டிலான் என்ற மீனவரே இவ்வாறு  கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  சம்பவம் தொடர்பில் மீன்பிடி படகின் நடத்துனர்  தொடர்பில் படகு உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் பின்னர் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம்  பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து “ஹரினி துவ 2” என்ற பலநாள் மீன்பிடி படகு ஆறு மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ள நிலையில், ரசிக டிலான் என்ற 33 வயதுடைய குறித்த மீனவர் இரவு 9 மணியளவில் கடலில் விழுந்து காணாமல் போனதாக நடத்துனர்   தகவல் தெரிவித்தாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply