யாழில் தொலைதூர தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply