உயிரிழந்த சாந்தனின் உடல் நளினியிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருந்ததை அடுத்து அவர் இலங்கைக்கு நாடு திரும்பவிருந்த நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்திருந்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply