கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் மீது தொடருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த இரு வெளிநாட்டவரும் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து முதல் வகுப்பில் பயணித்தமைக்காக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடருந்து ஊழியர்கள் அவர்களை தாக்கியதோடு தொடருந்தில் இருந்து கீழே இழுத்தும் உள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.