நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய நடவடிக்கை!

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளோம்.

இந்த நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட வேண்டும்.

புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அடிப்படை விதிகளைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply